பாடகியாக இருந்து நடிகையாக மாறிய மிகச் சில நடிகைகளில் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸும் ஒருவர். நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் தமிழ் மற்றும் மலையாளத்தில் கடந்த 15 வருடமாக தனது இடத்தை தக்க வைத்துள்ளார் மம்தா மோகன்தாஸ். இதனால் உள்ளூரில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் மம்தா மோகன்தாஸுக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது..
இந்தநிலையில் சமீபத்தில் அபுதாபியில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மம்தா மோகன்தாஸ் அப்போது அந்த நிகழ்வில் கலந்துகொண்ட சல்மான்கானை சந்தித்து உரையாடியுள்ளார்.. அதன்பின் அங்கு நிருபர்களிடம் பேசியபோது சல்மான்கானுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்... மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர்களான அபிஷேக் பச்சன் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோருடனும் தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் மம்தா..