கோவா சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது : பாலகிருஷ்ணாவுக்கு கவுரவம் | ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் |

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், ராதிகா, சமுத்திரக்கனி, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள படம் யானை. ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜூன் 17ஆம் தேதி திரைக்கு வரும் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் யானை படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இரண்டு நிமிடம் ஓடக்கூடிய இந்த டிரைலரில் ஆக்சன், சென்டிமெண்ட் கலந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. முதல்பாதியில் சென்ட்டிமென்ட்டும், அடுத்து ஆக்ஷனிலும் அசத்தி உள்ளார் அருண் விஜய். அதோடு டிரைலரின் இறுதியில் தான் ஒரே ஒரு வசனம் வருகிறது. ‛‛ஒதுங்கிப்போன உரசுவீக, பதுங்கி போன பாய்வீக, சமாதானம் பேச வந்தாலும் அறிவாளில்தானடா வெள்ளைக்கொடி எடுத்து வர்றீங்க'' என்ற அனல் தெறிக்கும் வசனம் இடம் பெற்றுள்ளது. ஹரியின் வழக்கமான படம் போன்று இது இருக்காது என அவரே கூறியுள்ளார்.




