ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
சாமி 2 படத்திற்கு பிறகு ஹரி இயக்கி இருக்கும் படம் யானை. இதில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இயக்குனர் ஹரி பேசியதாவது: எனது 'தமிழ்' படத்தில் ஆரம்பித்த பயணம், மெல்ல மெல்ல ஆக்ஷன் படங்களுக்கு தாவி... அதில் வெற்றி கிடைத்ததால் அதிலேய பயணித்து தெலுங்கு படங்கள் மாதிரியான படங்கள் வரை சென்று விட்டேன். எனக்கு சில ஆண்டுகள் இடைவெளி கிடைத்தது. அதில் நான் நிறைய சிந்தித்தேன். நிறைய படங்கள் பார்த்தேன். இப்போதுள்ள டிரண்டை புரிந்து கொண்டேன். அதனால் என்னை முழுமையாக மாற்றிக் கொண்டு உருவாக்கி உள்ள படம் யானை.
இதில் எனது பாணியிலான படு வேகம் இருக்காது, ஓங்கி அடிச்சா ஒண்டரை டன் வெயிட் இருக்காது. ஒரு எமோல்சலான, பீல் குட் படமாக இருக்கும். இரண்டு இடத்திலாவது ஆடியன்ஸ் கண்ணீர் சிந்தினால் இந்த படம் வெற்றி. அப்படி யோசித்து இந்த படத்தை எடுத்துள்ளேன். யானை எப்போதும் தன் குடும்பத்துடன் இருக்கும், மிகுந்த பொறுமையான விலங்கு. ஆனால் அதற்கு கோபம் வந்தால் என்ன ஆகும் அதுதான் இந்த படத்தின் கதை. என்றார்.