லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
இந்திய அளவில் மிகப் பெரும் நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களுக்கான முதல் நாள் முன்பதிவு, விடுமுறை நாள் முன்பதிவு ஆகியவை சிறப்பாக இருக்கும். இதுவரையில் ஹிந்திப் படங்களைப் பொறுத்தவரையில் முன்பதிவு மூலம் 37 கோடி ரூபாயை வசூலித்து முதலிடத்தில் 'பாகுபலி 2' படம் இருந்து வந்தது.
அந்த சாதனையை இன்று வெளியாகி உள்ள 'கேஜிஎப் 2' படம் முறியடித்துள்ளது. இப்படத்திற்கு முன்பதிவு மூலம் மட்டுமே 39 கோடி வரை வசூல் கிடைத்துள்ளது. தற்போது முதலிரண்டு இடங்களையும் பிடித்திருப்பது தென்னிந்தியப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கிலிருந்து ஹிந்திக்கு டப்பிங் செய்யப்பட்ட 'பாகுபலி 2' படம் வந்த பிறகு ஹிந்திப் படங்களின் வியாபாரம் மற்றும் வசூலை அப்படம் பின்னுக்குத் தள்ளியது. இப்போது ஹிந்திக்கு டப் செய்யப்பட்டு வெளியான கன்னடப் படமான 'கேஜிஎப் 2' இந்த சாதனையைப் புரிந்திருப்பது பாலிவுட்டினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
'பாகுபலி 2, கேஜிஎப் 2' படங்கள் மூலம் தென்னிந்திய இயக்குனர்களும் தங்களது திறமையை நிரூபித்துள்ளார்கள்.