ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் நேற்று வெளியானது. தமிழகம் முழுவதும் சுமார் 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படம் வெளியாகி உள்ளது.
நேற்று விடுமுறை நாள் இல்லை என்றாலும் படத்திற்கு மிகப் பெரும் வசூல் கிடைத்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டுமே இப்படம் 40 கோடி வரையில் வசூலைப் பெற்றிருக்கும் என்கிறார்கள். பெரும்பாலான தியேட்டர்களில் நேற்று 6 காட்சிகள் வரை நடைபெற்றுள்ளன. அதிகாலை சிறப்புக் காட்சி டிக்கெட்டுகள் 2000 ரூபாய் வரைக்கும், காலை 8 மணி காட்சி டிக்கெட்டுகள் 500 ரூபாய் வரைக்கும் விற்கப்பட்டுள்ளன.
படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகம் வெளிவந்துள்ளது. இருப்பினும் மற்ற மாநிலங்களிலும் நேற்று வசூல் நிலவரம் நன்றாகவே இருந்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. உலக அளவில் 50 கோடி வசூலை இந்தப் படம் முதல் நாளில் கடந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வசூல் நடந்திருந்தால் தமிழில் இதுவரை வெளிவந்த படங்களின் முதல் நாள் வசூலில் 'பீஸ்ட்' புதிய சாதனை படைக்கும்.




