நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
ஸ்ரீ கிருஷ்ணா பிலிம் புரொடக்ஷ்ஸ் சார்பில் எஸ்.வி.சூரியகாந்த் தயாரிக்கும் படத்தை, சங்கர் - கென்னடி இரட்டையர்கள் இயக்குகிறார்கள். இந்த படத்தில் பிரஜின் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஆஜீத் நாயக் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பிரகயா நயன், ரஷ்மி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, ஷோபராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். வினோத்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், விஜய் யாட்லீ இசை அமைக்கிறார்.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்புகள் தர்மபுரியில் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
படம் பற்றி இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் கென்னடி கூறியதாவது: அரசியல் கலந்த கிரைம் திரில்லர் கதை இது. தவறான அரசியல் வாதிகளின் ஆதிக்கத்தால் சாமானிய மக்கள் எப்படி பாதிக்கப் படுகிறார்கள் என்ற முக்கியமான விஷயத்தை இதில் சொல்ல இருக்கிறோம். இணை பிரியா இரண்டு நண்பர்கள் ஒரு அரசியல் வாதியின் சூழ்ச்சியில் சிக்குகிறார்கள் அதிலிருந்து எப்படி மீண்டார்கள் இறுதியில் அவர்களது நட்பு என்னவானது என்பது படத்தின் திரைக்கதை. என்கிறார்கள்.