மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சிம்ரன் இணைந்து நடித்து வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி' . இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வரும் குடும்பத்தினர் இங்குள்ள வாழ்க்கைக்கு எப்படி தங்களை பொருத்திக் கொள்கிறார்கள் என்பதை இப்படம் கலகலப்பாக சொல்கிறது.
இப்படம் வெளியாகி மூன்றாவது வாரத்தை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் இப்போது உலகளவில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், தமிழகத்தில் மட்டும் ரூ. 55 கோடி வசூலைக் கடந்ததாக விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




