ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் பராசக்தி. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இதை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். சமீபத்தில் ஆகாஷ் அமலாக்கத்துறை ரெய்டில் சிக்கினார். விசாரணைக்கு ஆஜராகாமல் அவர் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இயக்குனர் சுதா கூறுகையில், ‛‛பராசக்தி படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற வேண்டி உள்ளது. தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் மதராஸி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதன் காரணமாகவே பராசக்தி படப்பிடிப்புக்கு ஒரு சிறிய பிரேக் கொடுத்து இருக்கிறோம். விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவது குறித்து அவரிடத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, எல்லா செய்திகளும் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இதற்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று தவிர்த்துவிட்டார். மேலும் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை இப்போது வரை நாங்கள் முடிவு செய்யவில்லை. மொத்த படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் ரிலீஸ் தேதியை முடிவு செய்வோம்'' என்றார்.