'ரெட்ரோ' - சொந்தக் குரலில் டப்பிங் பேசிய பூஜா ஹெக்டே | தனுஷ் படம் குறித்து பகிர்ந்த கிர்த்தி சனோன் | சர்ச்சை வீடியோ விவகாரம் : பிக்பாஸ் விக்ரமன் வெளியிட்ட தகவல் | 25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு கம்பேக் தரும் சங்கீதா | சர்தார் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கார்த்தி | ரம்பாவின் சொத்து மதிப்பு 2000 கோடி: தயாரிப்பாளர் தாணு தந்த தகவல் | ஸ்ரீதேவியின் 'மாம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் மகள் குஷி கபூர் | ஹிந்தியில் 'டாப் ஸ்டார்' ஆகும் ராஷ்மிகா மந்தனா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா |
தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற படங்களின் நடித்து வரும் தனுஷ் தற்போது தமிழ்- தெலுங்கில் தயாராகும் வாத்தி படத்திலும் நடித்து வருகிறார். வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படத்தை அடுத்து இன்னொரு தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் படத்திலும் நடிக்கப் போகிறார்.
இதற்கிடையே அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் இயக்கும் அடுத்த படத்திலும் தனுஷ் நடிக்க இருப்பதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கயிருக்கும் சுகுமார், நானே வருவேன் படத்தில் தனுஷ் நடித்து முடித்ததும் அவருடன் இணையும் புதிய படத்தை தொடங்குகிறார். அந்த வகையில் தனுசும் சுகுமாரும் இணையும் புதிய படம் அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.