‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

கொரோனா பரவல் ஒமிக்ரான் வடிவில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. பல சினிமா பிரபலங்கள் இந்த அலையில் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் நடிகை த்ரிஷாவும் ஒருவர். புத்தாண்டைக் கொண்டாட லண்டன் சென்றிருந்த போது அங்கு அவருக்கு கொரோனா தொற்று பரவியது.
ஐந்து நாட்களுக்கு முன்பு தனக்கு கொரோனா வந்தது குறித்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார் த்ரிஷா. கொரோனாவிலிருந்து மீண்டு விட்டதாக இன்று காலை அறிவித்துள்ளார்.
“ரிப்போர்ட்டில் 'நெகட்டிவ்' என படிக்கும் போது, இதை விட மகிழ்ச்சியாக இருந்ததில்லை. உங்கள் அனைவரின் பிரார்த்தனைக்கும், அன்புக்கும் நன்றி. 2022, இப்போது உனக்காக நான் ரெடி,” என செல்பியுடன் பகிர்ந்துள்ளார்.
இந்த 2022ம் ஆண்டு வெளிவர உள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் த்ரிஷா குந்தவையாக நடித்துள்ளார். இப்படம் நிச்சயம் இவருக்கு பெரிய பெயரை பெற்றுத் தர வாய்ப்புள்ளது.