டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை |

பிரபாஸ் - பூஜா ஹக்டே காதலர்களாக நடித்துள்ள படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ணகுமார் இயக்கியிருக்கிறார். இப்படத்தை வருகிற ஜனவரி 14ஆம் தேதி வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். ஆனால் திடீரென்று கொரோனா தொற்று அதிகரித்ததால் ஆர்ஆர்ஆர் படத்தைப் போலவே ராதே ஷ்யாம் படத்தையும் மாற்று தேதியில் வெளியிட போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனபோதிலும் அதுகுறித்த தகவலை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை. இப்படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றப் போவதாக தெரிவிக்கவில்லை. அதனால் திட்டமிட்டபடி அப்படம் திரையரங்கில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராதே ஷ்யாம் பட இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், படம் தள்ளிப் போகும் என்ற முடிவுக்கு ரசிகர்களை உருவாக்கியது நேரங்கள் கடினமானவை இதயங்கள் பலவீனமானவை மனங்கள் குழப்பத்தில் உள்ளன. வாழ்க்கை நம்மை நோக்கி எரிந்தாலும் நமது நம்பிக்கைகள் எப்போதும் உயர்ந்தவை. பாதுகாப்பாக இருங்கள். உயர்வாக இருங்கள் என்று கூறியிருக்கிறார். அவரது இந்த பதிவை பார்க்கையில் ராதே ஷ்யாம் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு குறித்து மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறீர்களா? என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு, அப்படியான திட்டங்களை வைத்திருந்தால் அதை நேரடியாக தெரிவித்து இருப்பேன் என்றும் பதிலளித்துள்ளார்.
ஆனபோதிலும் பிரபாஸின் ரசிகர்கள் ராதா கிருஷ்ணகுமார் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை நம்பவில்லை. காரணம் அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில் தங்கள் அறிக்கைகளில் மாற்றிவிட்டார்கள். அதனால் ஜனவரி 14ஆம் தேதி ராதே ஷ்யாம் படம் வெளி வர வாய்ப்பில்லை என்பதே பிரபாஸ் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.




