பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
‛பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே' படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பற்றி இப்படம் பேசுகிறது. விழாவில் இயக்குனர் பேரரசு பேசியதாவது:பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆண்களாமல் மட்டுமே நடப்பதில்லை. சில பெண்களும் காரணமாக இருக்கிறார்கள்.
டிக்டாக்கில் நடக்கும் கொடுமை தாங்க முடியவில்லை. சில பெண்கள் பேசுகிற விதமும், நடக்கும் செயலும் சகிக்க முடியவில்லை. அவர்களை எல்லாம் பிடித்து ஜெயிலில் தள்ள வேண்டும். மொபைல் தான் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது. தங்கள் பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். இதைப் பெற்றோர்கள் புரிந்து கொண்டு கவனமாக வேண்டும். நம் சுதந்திரம் இப்படி மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது. அளவற்ற சுதந்திரம்தான் நாட்டைக் கெடுக்கிறது. செல்போனில் புல் டாக்டைம் என்பதை ஒழித்துக்கட்ட வேண்டும். அளவில்லாமல் பேசும் வாய்ப்புதான் அத்தனை தவறுகளுக்கும் வழிவகுக்கிறது.
நாம் எத்தனை படம் எடுத்தாலும் இவர்கள் திருந்தப் போவதில்லை. பெண்கள் விஷயத்தில் யார் தப்பு செய்தாலும் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். வாத்தியாராக இருந்தாலும் சரி, மதகுருமார்களாக, சாமியார்களாக, அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, சரியான தண்டனை கொடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான கொடுமை ஒரு நாள் செய்தியாக கடந்து விடுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.