பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு |
டிவி சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் அனிதா சம்பத். அதை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷாரிக்குடன் இணைந்து டைட்டிலையும் தட்டி சென்றார். தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புக்காக காத்திருப்பதாலோ என்னவோ சீரியல் வாய்ப்புகளையும் அவர் தவிர்த்து வருகிறார் என்றும் சொல்லப்பட்டது.
இந்தநிலையில் சிவகார்த்திகேயன் படத்தில் முக்கியமான வேடத்தில் அனிதா சம்பத் நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அதை உறுதிப்படுத்துவது போல சிவகார்த்திகேயனுடன் அனிதா எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அனேகமாக சிவகார்த்திகேயன் முதன்முறையாக தெலுங்கில் நடிக்கும் படத்தில் தான் அனிதா சம்பத்தும் நடிப்பார் என தெரிகிறது.