டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

2022ம் ஆண்டின் துவக்கமே கொரோனாவின் மூன்றாவது அலையுடன் ஆரம்பமாகியுள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என அமல்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என பல மாநிலங்கள் அறிவித்துவிட்டன. தொடர்ந்து பல மாநிலங்களில் புதுப்புது கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள்.
இந்த ஆண்டின் முதல் பெரிய படமாக இந்த வாரம் ஜனவரி 7ம் தேதி வெளிவர இருந்த 'ஆர்ஆர்ஆர்' படத்தைத் தள்ளி வைத்துவிட்டார்கள். பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'ராதேஷ்யாம்' படம் ஜனவரி 14 அன்று வெளியாகும் என்று நேற்று வரை தகவல்கள் வெளிவந்தன. கர்நாடகாவில் தற்போது வார இறுதி நாட்களில் ஊரடங்கு விதித்துவிட்டார்கள்.
தமிழகத்தில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் என்பது இன்று தெரிய வரும். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள படங்கள் திட்டமிட்டபடி வெளிவர வாய்ப்பில்லை என்பது தான் தற்போதைய சூழ்நிலை.
'ராதேஷ்யாம், வலிமை, வீரமே வாகை சூடு' ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடு என அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தள்ளி வைக்கவே அதிக வாய்ப்புகள். மிக விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம்.




