அல்லு அர்ஜுன் வீடு மீது கல்வீசி தாக்குதல் | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் ஹிந்தி பாடல்கள் | பிளாஷ்பேக் : பவுத்த மத பின்னணியில் உருவான 'அசோக்குமார்' | 'தி ஸ்மைல் மேன்' மூலம் திரும்பி வந்த சிஜா ரோஸ் | 2024ன் கடைசி வாரம்… 10 படங்கள் ரிலீஸ் | 'கேம் சேஞ்சர்' படத்திற்கு புதிய சிக்கல் | 'டேபிள் பிராபிட்' பார்த்த விக்ரமின் ‛வீர தீர சூரன்' | தமிழகத்தில் சிறப்புக் காட்சிகள் ரத்தாகுமா? | 2024 - ரசிகர்களுக்குக் கிடைத்த ஏமாற்றம் | விடுதலை-3 படம் உருவாகிறதா? சூரி சொன்ன பதில் |
மலையாளத்தில் கடந்த வருடம் இணையதளத்தில் வெளிவந்து பெரும் விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்ற படம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்'.
அப்படத்தை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் நடிக்க கண்ணன் இயக்கத்தில் ரீமேக் செய்தார்கள். புத்தாண்டை முன்னிட்டு படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார்கள். தமிழுக்காக படத்தின் பெயரில் எந்த மாற்றமும் செய்யாமல் மலையாளத்தில் இருந்த அதே பெயரே போஸ்டரில் இடம் பெற்றிருந்தது.
ஆனால், 'The' என்ற ஆங்கில எழுத்து தமிழில் 'தீ' என இடம் பெற்றிருந்தது. மலையாளத்தில் படத்தைப் பார்ததவர்களுக்கு 'தீ' என்பதும் பொருத்தமான ஒரு தலைப்புதான் அதனால்தான் அப்படி வைத்துள்ளார்களோ என்றும் நினைக்கத் தோன்றியது. ஆனால், அது எழுத்துப் பிழையுடன் வெளியான போஸ்டர் என்பது இன்று தெரிய வந்துள்ளது.
இன்று படத்தின் இரண்டாவது போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதில் 'The' என்பதற்கான தமிழாக்கம் 'தி' என தவறு சரி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், தமிழில் வேறு புதிதாக தலைப்பு வைக்கக் கூட யோசிக்காமல் அதே தலைப்பையே பயன்படுத்துகிறார்களே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.