இந்தியாவில் வசூலை அள்ளும் 'எப் 1, ஜூராசிக் வேர்ல்டு, சூப்பர் மேன்' | அனல் காற்று, தூசு, கொப்பளங்கள்... : 'மோனிகா' அனுபவம் பகிர்ந்த பூஜா | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! |
ஹாலிவுட் நடிகர் அமீர்கான் தயாரிப்பில் அவரது முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கி வெளிவந்த படம் 'லாபத்தா லேடிஸ்'. ஆஸ்கார் வரை சென்ற இந்த படம் தற்போது காப்பி பிரச்னையில் சிக்கி உள்ளது. இந்த படம் 'புர்கா சிட்டி' என்ற ஈரானிய படம் ஒன்றின் காப்பி என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து 'லாபத்தா லேடிஸ்' படத்தின் கதாசிரியர் பிப்லாக் கோஸ்வாமி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது : நான் எனது 'லாபத்தா லேடீஸ்' திரைக்கதையை 2014ம் ஆண்டு திரைக்கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துவிட்டேன். மேலும், திரைக்கதையின் முழு ஸ்கிரிப்ட்டையும் 2018ல் பதிவு செய்ததற்கான ஆதாரமும் வைத்துள்ளேன்.
உலகளவில் ரசிக்கப்படும் 'லாபத்தா லேடீஸ்' படத்தின் திரைக்கதை தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், எழுத்தாளரான என் மனதில் எரிச்சலூட்டுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் நிச்சயம் இயக்குநர் கிரண் ராவ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் மனக் கவலையை ஏற்படுத்தியிருக்கும். நான் இந்த படத்துக்காக பத்து வருடங்கள் உழைத்துள்ளேன். என் படக்குழுவினரும் இந்த படத்துக்காக அதிகம் உழைத்துள்ளனர்.
என்னிடம் எவரும் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரு முறை கூட ஆலோசிக்காமல் படத்தை குறித்து குற்றம்சாட்டி வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. யாரேனும் திடீரென இதுபோல் ஏதேனும் குற்றச்சாட்டுகள் வைத்தால், அதை அனைவரும் நம்புகின்றனர். பின், அனைத்து சூழலும் மாறிவிடுகிறது. ஆனால் அது படக்குழுவினரான எங்கள் மனதை மிகவும் காயப்படுத்தியுள்ளது.
நான் 2014-ல் என் திரைக்கதையை திரைக்கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்த ஆதாரம் போதுமானது என நினைக்கிறேன். என் திரைக்கதையை 'புர்கா சிட்டி' இயக்குநர் திருடி விட்டார் என நான் குற்றம்சாட்ட விரும்பினால் குற்றம் சாட்டலாம். ஆனால், கலை ஒருமைப்பாடு மற்றும் மனிதாபிமான அடிப்படையில் நான் அத்தகைய குற்றச்சாட்டுகளை தவிர்க்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.