ஆர்பி சவுத்ரிக்கு கண்ணீர் மல்க விஜய் இறுதி அஞ்சலி : கதறி அழுத ஜீவாவிற்கு ஆறுதல் | தேவிஸ்ரீ பிரசாத்திற்கு ஜோடி மிருணாள் தாக்கூரா.? | மத்திய சென்சார் போர்ட் புதிய தலைவராக ஷஷி சேகர் நியமனம் | பிரான்ஸிற்கு செல்லும் வாரணாசி குழு | ஜோதிகா, சோனாக்ஷியின் சிஸ்டம் மே 22ல் ரிலீஸ் | சல்மான்கான் படத்தில் வில்லனாகும் பஹத் பாசில் | ஸ்டாலினுக்கு ஆறுதல் சொல்லி பதிவு போட்ட நடிகை ரூபா மஞ்சரி | ஸ்டாலின் - ரஜினிகாந்த் சந்திப்பு… சொல்வது என்ன ? | ஆர்பி சவுத்ரி உடல் சென்னை வந்தது : திரையுலகினர் அஞ்சலி | 'கர': அடுத்த தோல்வியை நோக்கி தனுஷ் |

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி அடுத்து ஏற்கனவே தன்னை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தாடி வைத்த கெட்டப்புக்கு மாறி இருக்கிறார் ஜெயம் ரவி. அதையடுத்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என பல படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்கப் போகிறார். இது அவரது 30வது படமாகும். பெரும்பாலும் காதல் கலந்த காமெடி படங்களாக இயக்கி வந்துள்ள ராஜேஷ், ஜெயம் ரவி நடிக்கும் இந்தப்படத்தை குடும்ப கதையாக இயக்கப்போகிறார். 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.




