'திரவுபதி 2' படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | அமிதாப்பச்சன் வீட்டில் தங்க கழிப்பறையா : பரபரப்பு கிளப்பிய பாலிவுட் நடிகர் | அமைச்சர் வாக்குறுதி ; வேலை நிறுத்தத்தை கைவிட்ட மலையாள திரையுலகம் | ஊர்வசியின் சகோதரர் நடிகர் கமல் ராய் காலமானார் | பிளாஷ்பேக் : இளவரசு நடிகரானது இப்படித்தான் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை காப்பாற்றிய நடன இயக்குனர் | கோட்டயத்தில் நடந்த உண்மை சம்பவம்: தலைவர் தம்பி தலைமையில் இயக்குனர் பேட்டி | உடற்கேலி : ஈஷா ரெப்பா வருத்தம் | பாரத், சான்வீயின் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | சிரஞ்சீவி படத்தில் நடிக்க இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை |

நடிகைகளிலேயே கொஞ்சமும் தயங்காமல் துணிச்சலாக தனது கருத்துக்களை சொல்லக்கூடியவர் நடிகை பார்வதி. அதனால் தான் நடிகர் சங்கத்தில் நடிகர் திலீப்பை இணைத்த விஷயத்தில் மோகன்லாலுடனும், கசபா படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமான கதாபாத்திரத்தில் நடித்தார் என மம்முட்டியுடனும் மோதல் போக்கை கடைபிடித்தார் பார்வதி. இதனாலேயே அவருக்கு மறைமுக ரெட்கார்டு போடப்பட்டு பட வாய்ப்புகளும் குறைந்தன.
இந்தநிலையில் ரசிகர்கள் மட்டுமல்ல, மலையாள திரையுலகமும் ஆச்சர்யப்படும் விதமாக மம்முட்டியுடன் இணைந்து 'புழு' என்கிற படத்தில் நடித்து வருகிறார் பார்வதி. தற்போது வெளியாகியுள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் மம்முட்டி சோபாவில் சீரியஸாக அமர்ந்திருப்பது போலவும் அவர் எதிரே பார்வதியும் அருகில் ஒரு சிறுவனும் கைகட்டி நின்றிருப்பது போலவும் அவர்களது உருவம் கண்ணாடியில் தெரிவது போலவும் உருவாக்கப்பட்டுள்ளது. பார்வதியின் இத்தனை வருட திரையுலக பயணத்தில் முதன்முதலாக மம்முட்டியுடன் ஒரே பிரேமில் இணைந்து இருப்பது போல வெளியான முதல் புகைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.