ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

1946ம் ஆண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க தொடங்கினார். சில காட்சிகள் படமான நிலையில் அப்போது இருந்த தியேட்டர் அதிபர்களும், விநியோகஸ்தர்களும் "இந்தப் பையன் ( எம்ஜிஆர்) ஆள் நன்றாக இல்லை, கேரக்டருக்கு பொருத்தமாக இல்லை அவனை நீக்கி விட்டு வேறொருவரை போட்டு எடுத்தால் படத்தை வாங்குவோம்" என்று கூறிவிட்டார்கள். இதனால் எம்ஜிஆர் நீக்கப்பட்டு அதன் பிறகு பி.யு சின்னப்பா அந்த படத்தில் நடித்தார்.
1947ம் ஆண்டு வெளியான 'ராஜகுமாரி' தான் எம்.ஜி.ஆர் நாயகனாக நடித்த முதல் திரைப்படம். இதற்கு முந்தய படத்தில் இடையில் நீக்கப்பட்டது போன்றே இந்த படத்தின் நாமும் நீக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்திலேயே எம்ஜிஆர் நடித்து வந்தார். அவர் நினைத்தபடியே நடந்தது ஒரு கட்டத்திற்கு மேல், எடுத்தவரை படத்தை போட்டு பார்த்த, தயாரிப்பாளர் ஜூபிட்டர் பிச்சர்ஸ் சோமு, மற்றும் அவருடன் இருந்த இணை தயாரிப்பாளர்களுக்கு படம் அவ்வளவாக திருப்தி இல்லை. இதனால் படத்தை இத்தோடு கைவிட்டுவிடலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
அதேசமயம் சோமு பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி இருக்கிறது. மீதி இருப்பதையும் எடுத்துவிட்டு அதன்பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார். சோமு கூறியதை இணை தயாரிப்பாளர்களும் தொடர்ந்து ஒப்புக்கொண்டனர்.
இந்தப் படத்தில் எம்ஜிஆர் தினசரி சம்பளத்தில் நடித்து வந்தார். பல மாதங்கள் படப்பிடிப்பு நின்று விட்டதால் சம்பளம் இல்லாமல் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டார். இதனால் சென்னைக்கு திரும்பி வேறு படத்தில் முயற்சி செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த படத்தின் நடன இயக்குனர் குமார்,"உங்களை நாயகனாக வைத்து படம் எடுக்க யாரும் தயாராக இல்லை. ஆனால் ஜூபிட்டர் பிச்சர்ஸ் சோமு உங்களை நாயகனாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் அவர் விருப்பத்தின்படி இந்த படத்தில் நடித்து முடிக்காமல், நீங்கள் இந்த ஸ்டூடியோவில் இருந்து வெளியில் செல்ல கூடாது" என்று கூறி 1800 ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
இந்த பணத்தை உங்களால் முடியும்போது திருப்பி கொடுங்கள். இதை வைத்தக்கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
தயாரிப்பாளர்கள் படம் சரியில்லை என்று நினைத்த ராஜகுமாரி திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றதோடு மட்டுமல்லாமல், எம்.ஜி.ஆருக்கு முன்னணி நாயகன் என்ற அந்தஸ்தையும் கொடுத்தது. பின்னாளில் தனக்கு ஊக்கம் கொடுத்து பண உதவி செய்த குமாருக்கு வெளியுலகம் அறியாமல் மிகப்பெரிய உதவிகளை செய்தார் எம்ஜிஆர்.




