ஏப்ரல் 16ல் ஓடிடியில் வெளியாகும் 'யூத்' | பிளாஷ்பேக்: வெளிநாட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் “நவயுவன்” | பிளாஷ்பேக்: திரையரங்கை விட்டு எடுக்க மறுத்த இயக்குநர் திலகம் கே எஸ் கோபாலகிருஷ்ணனின் திரைப்படம் | மருதநாட்டு இளவரசி, ஜெயம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் - ஞாயிறு திரைப்படங்கள் | ஜனநாயகன் லீக் ; தவறான குற்றச்சாட்டு : தணிக்கை வாரியம் அறிக்கை | திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள் : ‛ஜனநாயகன்' லீக் பற்றி மமிதா பைஜூ அறிக்கை | ஜெயிலர் 2 படத்தில் பவன் கல்யாண்? | ‛தி பாரடைஸ்' படத்தில் சுப்பு வேடத்தில் கயாடு லோகர் | ஏப்ரல் 24ல் ‛சிவகாசி' உடன் ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | 75 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஓர் இரவு' |

பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுட்டேலா ஹிந்தியை தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் தற்போது கவனம் செலுத்தி நடித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் வெளியான லெஜெண்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதேசமயம் கடந்த வருடம் தெலுங்கில் இவர் நான்கு படங்களில் நடித்திருந்தாலும் ஆச்சர்யமாக அந்த நான்கிலுமே பாடல் காட்சிகளில் நடனம் ஆடும் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது, தெலுங்கில் உருவாகி வரும் பாலகிருஷ்ணாவின் 109வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா
பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்கும் இந்த படத்தை கொல்லி சந்தோஷ் ரவிந்த்ரா என்பவர் இயக்கி வருகிறார். சமீப நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் முக்கியமான ஆக் ஷன் காட்சியில் நடித்தபோது ஊர்வசிக்கு காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா.