Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள் : ‛ஜனநாயகன்' லீக் பற்றி மமிதா பைஜூ அறிக்கை

11 ஏப், 2026 - 06:00 IST
எழுத்தின் அளவு:
Dont-support-pirated-versions-Mamita-Byjus-statement-on-Jananayagan-Leak
Advertisement

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கடைசி படமான ‛ஜனநாயகன்' தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் வெளியாகாமல் இருந்த சூழலில் நேற்று முழு படமும் லீக் ஆகி அதிர்ச்சியை அளித்தது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர். இந்த படம் லீக் ஆனது தொடர்பாக திரையுலகை சேர்ந்த பலரும் குரல் கொடுத்துள்ளனர். படத்தில் நடித்த நாயகி பூஜா ஹெக்டே கூட ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டார். ஆனால் படத்தின் ஹீரோவான விஜய் இதுவரை வாய் திறக்கவே இல்லை.

இந்நிலையில் ஜனநாயகனின் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த மமிதா பைஜூ வெளியிட்ட அறிக்கை : ‛‛அன்புள்ள ரசிகர்களுக்கு... ​ஒரு திரைப்படம் உருவாவதற்கு பின்னால், ஒவ்வொரு நாளும் தங்களின் முழு உழைப்பையும் வழங்கும் எண்ணற்ற கலைஞர்களின் கடின உழைப்பும், ஆர்வமும், அர்ப்பணிப்பும் உள்ளது.

​திரைப்படம் சட்டவிரோதமாகப் பகிரப்படுவதைக் காண்பது உண்மையில் வருத்தமளிக்கிறது. சில தருணங்கள் அவை உருவாக்கப்பட்ட நோக்கத்தின்படி, பெரிய திரையில் (திரையரங்கில்) அனைவருடனும் இணைந்து அனுபவிக்கப்பட வேண்டியவை. ​திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் போது அதை சரியான முறையில் கண்டு மகிழ்வோம். தயவுசெய்து திருட்டுத்தனமான பதிப்புகளை ஆதரிக்காதீர்கள். சினிமாவையும், அதன் பின்னால் இருக்கும் ஒவ்வொருவரையும் பாதுகாக்க அதுவே ஒரே வழி'' என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயிலர் 2 படத்தில் பவன் கல்யாண்?ஜெயிலர் 2 படத்தில் பவன் கல்யாண்? ஜனநாயகன் லீக் ; தவறான குற்றச்சாட்டு : தணிக்கை வாரியம் அறிக்கை ஜனநாயகன் லீக் ; தவறான குற்றச்சாட்டு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap