Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

75 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஓர் இரவு'

11 ஏப், 2026 - 04:49 IST
எழுத்தின் அளவு:
A-night-to-mark-75-years
Advertisement

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில் கேஆர் ராமசாமி, லலிதா, டிகே சண்முகம், பிஎஸ் சரோஜா, டிஎஸ் பாலையா, முத்துலட்சுமி, ஏ நாகேஸ்வரராவ் மற்றும் பலர் நடிப்பில் 1951ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி வெளியான திரைப்படம் 'ஓர் இரவு'.

இப்படம் வெளிவந்து இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இப்படத்தின் கதை, வசனத்தை தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதியிருந்தார். நாடகமாக பல முறை மேடைறியது பின்னர் திரைப்படமாக உருவானது. அண்ணாதுரை, கதை வசனம் எழுதிய மூன்றாவது படம் இது. படத்தின் தலைப்புக்கேற்றபடி ஓர் இரவிலேயே இப்படத்திற்கான கதை, வசனத்தை 300 பக்கத்திற்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். அதற்காக அவர் வாங்கிய சம்பளம் 10 ஆயிரம் ரூபாய். இப்படம் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்தாலும், வியாபார ரீதியாக தோல்வியை சந்தித்த படம்.

இப்படத்தில் சகோதரி நடிகைகள் லலிதா - பத்மினி இணைந்து ஆடிய நடனமும், குமாரி கமலா ஆடிய நடமும் இடம் பெற்றிருந்தது. தெலுங்குத் திரையுலகத்தில் பிற்காலத்தில் புகழ் பெற்ற கதாநாயகனாக விளங்கிய ஏ நாகேஸ்வரராவ் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்திருந்தார்.

பிற்காலத்தில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் இது. மலையாளம், தமிழ் என குணச்சித்திர நடிகையாக பிரபலமடைந்த சுகுமாரி இப்படத்தில் தான் நடிகையாக அறிமுகமானார்.

ஆர் சுதர்சனம் இசையில் பாரதிதாசன் எழுதிய 'துன்பம் நேர்கையில் யாழெடுத்து' பாடல் மிகவும் ஹிட்டான ஒரு பாடல்.

நாடகத்தை, சினிமாவுக்கேற்றபடி சரியாக மாற்றம் செய்யாத காரணத்தால்தான் இப்படம் தோல்வியைத் தழுவியது என தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்பன் பின்னர் தெரிவித்திருந்தார்.

இன்று இப்படம் 75வது வருடத்தைக் கொண்டாடும் விதத்தில் தயாரிப்பு நிறுவனம் வீடியோ டிரைலர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் இதற்கு முன்பு 'லீக்' ஆன படங்கள் என்னென்ன தெரியுமா ?தமிழில் இதற்கு முன்பு 'லீக்' ஆன ... ஏப்ரல் 24ல் ‛சிவகாசி' உடன் ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' ஏப்ரல் 24ல் ‛சிவகாசி' உடன் ரீ ரிலீஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap