தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு |

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் இடம்பெற்ற ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, சிவராஜ் குமார்,மோகன்லால் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்கள் அல்லாமல் புதிதாக இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பாலிவுட் நடிகை வித்யா பாலன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கர்போதி மற்றும் சந்தானம் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
இவர்களுடன் பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் நடிப்பதாக இருந்தது. சமீபத்தில் அவர் நடிக்கவில்லை என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து ஷாருக்கானுக்காக எழுதிய கேமியோ கதாபாத்திரத்தில் ஒரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்பதற்காக தற்போது தெலுங்கு சினிமா நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.




