Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரன்வீருக்கு 250 லுக், துரந்தருக்கு 10,000 உடைகள் : ஆடை வடிவமைப்பாளருக்கு நன்றி சொன்ன இயக்குனர்

11 ஏப், 2026 - 03:08 IST
எழுத்தின் அளவு:
250-looks-for-Ranveer,-10,000-outfits-for-Durant-Director-thanks-costume-designer
Advertisement

கடந்த டிசம்பர் மாதம் ஹிந்தியில் வெளியான துரந்தர் மற்றும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான அதன் இரண்டாம் பாகமான துரந்தர் 2 படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இயக்குனர் ஆதித்யா தர் மற்றும் ரன்வீர் சிங் கூட்டணியில் உருவான இந்த படம் பாகிஸ்தானை கதைக்களமாக கொண்டு ஒரு உளவாளி கதையாக உருவாகி இருந்தது. இதில் பிரபல நடிகர்களே நூற்றுக்கணக்கில் இடம்பெற்ற நிலையில் துணை நடிகர்கள் ஆயிரக்கணக்கில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஸ்மிருதி சவுகான் மிக நேர்த்தியாக அனைவருக்குமான ஆடைகளை வடிவமைத்திருந்தார். இந்த நிலையில் படத்தின் இயக்குனர் ஆதித்யா தர் தனது சோசியல் மீடியா பதிவில் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பக்க பலமாக ஆடை வடிவமைப்பில் உறுதுணையாக இருந்ததற்காக மிக நீண்ட பதிவுடன் தனது நன்றியை தெரியப்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “துரந்தர் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 10,000 ஆடைகளை தைத்தது மட்டுமின்றி முதல் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1000 உடைகளை இரவு பகல் தூக்கம் இன்றி உருவாக்கி தந்தார். அப்போது கூட ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் அணிந்திருக்கும் சட்டையின் கையில் இருக்கும் பட்டன் சரியாக இருக்க வேண்டுமே என்கிற நுணுக்கமான வேலையையும் செய்திருப்பார்.

இந்த படத்தில் ரன்வீர் சிங் நடித்த ஹம்சா கதாபாத்திரத்திற்கு 250க்கும் மேற்பட்ட தோற்றங்களை அவர் உருவாக்கி காட்டினார். இந்த படத்திற்குள் அவர் நுழைந்தபோது அவரிடம் இப்படித்தான் டிசைன்கள் உருவாக்க வேண்டும், இந்த கதைக்களத்திற்கு இதுதான் பொருத்தமானது என்று எந்தவிதமான கருத்துத் திணிப்போடும் உள்ளே வராமல், வந்த பிறகு கதைக்கு ஏற்றபடி அவர் ஆடைகளை வடிவமைத்து கொடுத்தார்.. இந்த படத்தில் நீங்கள் எனக்கு கிடைத்தது உண்மையிலேயே அதிர்ஷ்டம் தான்” என்று நெகிழ்ந்து கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வெளிநாடுகளில் ரூ.400 கோடி வசூலைக் கடந்த 'துரந்தர் 2'வெளிநாடுகளில் ரூ.400 கோடி வசூலைக் ... 'துரந்தர்-2 'படத்திற்கு தடைவிதிக்க : நீதிமன்றம் மறுப்பு 'துரந்தர்-2 'படத்திற்கு தடைவிதிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap