இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

மலையாளம், தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியிலும் நுழைந்து தனது நடிப்பு எல்லையை விரிவு படுத்தியவர் நடிகை பார்வதி. மற்ற கதாநாயகிகள் போல இல்லாமல் செலெக்ட்டிவ்வான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் பார்வதி, சினிமா சார்ந்த பிரச்னைகள் மற்றும் சமூக விஷயங்களில் அதிக அக்கறை காட்டுபவர். மலையாளத் திரையுலகில் துவங்கப்பட்ட சினிமா பெண்கள் நல அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்து கொண்டு சினிமாவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் பார்வதி.
இன்னொரு பக்கம் கேரள அரசின் கீழ் இயங்கி வரும் கேரள அரசு திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் ஒரு போர்டு மெம்பராக பொறுப்பு வகித்து வந்தார் பார்வதி. இந்த நிலையில் அவர் இந்த கழகத்தின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியாகி உள்ளது.
அதேசமயம் இதற்கு முன்னதாக இந்த திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனரிடம், தான் இந்த கழகத்தின் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள விரும்புவதாக பார்வதி அனுப்பிய கடிதத்தை தொடர்ந்தே அவர் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.




