இதெல்லாம் டிசம்பர் மாதம் ரிலீஸ் : ரிசல்ட் எப்படி இருக்குமோ? | சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் |

திரையுலகில் கதாநாயகனாக நுழைந்து பிற்காலத்தில் வில்லனாக வலம் வந்தவர் கிருஷ்ணம் ராஜூ. இவர் தெலுங்கு திரையுலகில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவர், பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷியாம் படத்தில் நடித்திருந்தார். ‛ரிபல் ஸ்டார்' என்று அழைக்கப்பட்ட கிருஷ்ணம் ராஜூ, நடிப்பிற்காக நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் இவர் எம்.பி.,யாகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 83. இவரது மறைவுக்கு திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




