இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மலையாள நடிகைகளில் குறிப்பிட்டு சொல்லத்தக்கவர் நடிகை மைதிலி. கதாநாயகி என்கிற நிலையை தாண்டி, மிக முக்கியமான கதாபாத்திரங்கள் என்றால் பல இயக்குனர்களும் கண்களை மூடிக்கொண்டு மைதிலியின் பெயரை டிக் அடிப்பார்கள். ஞான் என்கிற படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த இவர், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் என முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் ரஞ்சித்தால் மம்முட்டி நடித்த பாலேறி மாணிக்கம் என்கிற படத்தில் கடந்த 2009ல் அறிமுகமான மைதிலி அவரது பல படங்களில் உதவி இயக்குனராகவும் கூட பணியாற்றியுள்ளார்.
இந்தநிலையில் ஆர்க்கிடெக்ட் ஆக பணிபுரியும் சம்பத் என்பவருக்கும் மைதிலிக்கும் குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். திரையுலகை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளும் வகையில் இன்று மாலை கொச்சியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.