அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஜன கண மன திரைப்படம் வரும் ஏப்-28ஆம் தேதி வெளியாக உள்ளது. குயீன் படத்தை இயக்கிய டிஜோ ஜோஸ் ஆண்டனி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மம்தா மோகன்தாஸ், ஸ்ரீதிவ்யா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப்படத்தின் டிரைலர் வெளியாகி, டிரைலரின் இறுதிக்காட்சி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
ஒரு கால் சற்றே ஊனமான நிலையில் இருக்கும் பிரித்விராஜ், அரசியல்வாதி ஒருவரின் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளிப்பது போலவும் அதை கொடுத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தவுடன் அறைக்குள் வெடிகுண்டு வெடித்து சிதறுவது போலவும் அந்த காட்சி தத்ரூபமாக இடம் பெற்றிருந்தது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம்.
ஆனால் இந்த வெடிகுண்டு காட்சியை விஎப்எக்ஸ் உதவி இல்லாமல் நிஜமாகவே படமாக்கியுள்ளோம் என கூறியுள்ளார் இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி.. இந்த காட்சியின் முக்கியத்துவம் பற்றி தெரிந்ததுமே, இதனை லைவாகவே எடுக்கலாம் என சொல்லி ரிஸ்க் எடுத்து நடித்தாராம் பிரித்விராஜ்.. இரண்டுமுறை ரிகர்சல் பார்க்கப்பட்டு மூன்றாவது டேக்கில் இந்த காட்சி படமாக்கப்பட்டதாம்..