நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி உள்பட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகை நஸ்ரியா. பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு பல வருடங்களாக நடிக்காமல் இருந்தவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். தெலுங்கில் நானி நாயகனாக நடித்துவரும் ஆண்டே சுந்தரிகி என்ற படத்தில் நாயகியாக நடித்தபடி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் நானி, சுந்தர் என்ற பிராமின் இளைஞன் வேடத்திலும், நஸ்ரியா, லீலா தாமஸ் என்ற கிறிஸ்டியன் பெண் வேடத்திலும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று நஸ்ரியா பகத்தின் லீலா தாமஸ் என்ற கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தனது கனவுகளின் கடலில் பயணம் செய்யும் ஒரு உற்சாகமான புகைப்பட கலைஞராக நஸ்ரியா நடித்திருக்கிறார். இதற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. விவேக் ஆத்ரேயா இயக்கும் இந்த படம் ஜூன் மாதம் பத்தாம் தேதி திரைக்கு வர உள்ளது.