கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படம் தற்போது தெலுங்கில் பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. பிஜுமேனன் - பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரங்களில் பவன் கல்யாண் மற்றும் ராணா இருவரும் நடித்து வருகின்றனர். இதில் பிரித்விராஜின் கோஷி கதாபாத்திரத்தை தான் தெலுங்கில் டேனியல் சேகர் என்கிற பெயரில் ராணா டகுபதி நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மோகன்லாலை வைத்து தான் இயக்கியுள்ள ப்ரோ டாடி படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஐதராபாத்தில் முகாமிட்டு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்தி வந்தார் பிரித்விராஜ். அந்த சமயத்தில் தான் அங்கே பீம்லா நாயக் ரீமேக்கில் ராணாவும் நடித்து வந்தார்.
பிரித்விராஜின் டைரக்சனை நேரில் பார்க்க ஆசைப்பட்ட ராணா, ப்ரோ டாடி படப்பிடிப்பு தளத்துக்கே வந்து அவரது டைரக்சன் திறமையை கண்டு ரசித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தற்போது தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரித்விராஜ், கோஷி குரியனை டேனியல் சேகர் சந்தித்த நாள் என கூறி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.