காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |

கொரோனா அலை முதல் முதலாக கடந்த வருடம் பரவிய போது தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. முடங்கிக் கிடந்த புதிய படங்களை வெளியிட மாற்று வழியாக ஓடிடி தளங்கள் மூலம் வெளியீடு நடந்தது.
தமிழ் உள்ளிட்ட முக்கிய மொழிகளில் பல புதிய படங்கள் தியேட்டர்களில் வெளியாகின. ஆனால், அவற்றில் பெரும்பாலான படங்கள் வரவேற்பைப் பெறவில்லை. ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்தன. தியேட்டர்களில் பார்க்கும் திருப்தி ஓடிடி மூலம் பார்ப்பதில் கிடைக்கவில்லை என்பதே பலரது கருத்தாக இருந்தது.
இந்த இரண்டாவது அலை பரவலின் போது பாலிவுட்டில் முதல் பெரிய ஓடிடி வெளியீடாக பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடித்த 'ராதே' படம் வெளியானது. ஆனால், படத்திற்கு மோசமான விமர்சனங்களும், வரவேற்பும்தான் கிடைத்தது. 249 ரூபாய் பணம் செலுத்தி பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள்.
இதனிடையே, பைரசி மூலம் பல ரசிகர்கள் படங்களைப் பார்த்தது குறித்தும் சல்மான் கோபமடைந்தார். படத்தைக் கிண்டலடித்து விமர்சனம் செய்த கமால் கான் என்பவர் மீது சல்மான் கான் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சல்மானின் வழக்கு முடிவுக்கு ரசிகர்கள் பலரும் அவரை விமர்சித்தனர்.
இப்படி தேவையில்லாத சர்ச்சைகள் வந்ததையடுத்து சல்மான் கான் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். இனி, எக்காரணத்தைக் கொண்டும் தன்னுடைய படங்களை ஓடிடியில் வெளியிடுவதில்லை, தியேட்டர்களில் மட்டுமே வெளியிடுவோம் என்று சொல்லிவிட்டாராம். இதனால், தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.