செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சமீபத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கருப்பு நிற ஆடை ஒன்றை அணிந்து போஸ் கொடுத்திருந்த புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலானது. ஆனால் ஏற்கனவே நடிகை தீபிகா படுகோனே வெளியிட்டிருந்த புகைப்படம் ஒன்றில் இதேபோன்ற உடையை அணிந்திருந்ததாக குறிப்பிட்டு, இரண்டும் ஒன்று போலவே இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது.
ஆனால் இந்த ஒப்பீட்டை விரும்பாத பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ரா, உடனடியாக இதற்கு பதில் கொடுத்திருக்கிறார். அதாவது, “பார்வை இல்லாதவர்கள் தான் இந்த இரண்டு உடைகளும் ஒரே மாதிரி இருப்பதாக கூறுவார்கள். தவிர பிரியங்கா எப்போதுமே உயர்தரமான சிறந்த ஆடைகளையே அணிவார்” என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் தீபிகா படுகோனின் ஆடையை மறைமுகமாக மட்டம் தட்டி பேசியிருக்கிறார். தனது இந்த கருத்தை தொடர்ந்து நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் மீரா சோப்ரா.