7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

முன்பெல்லாம் எம்ஜிஆர், ரஜினிகாந்த் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறும்போது அதன் லாபத்தொகையில் ஒரு பங்கு, படத்தில் பணியாற்றிய பலருக்கும் அன்பளிப்பாக்க வீடு தேடிச் செல்லும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்போதெல்லாம் அந்த நடைமுறை இல்லை. அதே சமயம் கடந்த ஜனவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி வசூலை வாரி குவித்த 'ரேகாசித்திரம்' படத்தின் தயாரிப்பாளர் இந்த உழைப்பாளர் தினத்தில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் போனஸை அனுப்பி வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் வெளியான 'ரேகாசித்திரம்' படத்தில் ஆசிப் அலி கதாநாயகனாக நடித்திருந்தார். கதாநாயகியாக அனஸ்வரா ராஜன் நடிக்க, ஏ.ஐ தொழில் நுட்பத்தில் நடிகர் மம்முட்டியும் இதில் சில காட்சிகளில் இடம் பெற்று இருந்தார். ஜோபின் டி சாக்கோ இயக்கிய இந்த படத்தை தயாரிப்பாளர் வேணு குன்னப்பிள்ளி என்பவர் தயாரித்திருந்தார். மலையாள திரையுலகில் இந்த வருடத்தின் முதல் வெற்றி படமாகவும் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த படமாகவும் இது இடம் பிடித்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் படத்தொகுப்பாளர் சமீர் முகமதுக்கு மே தினத்தன்று இந்த கம்பெனியிலிருந்து ஒரு தொகை போனஸ் ஆக அனுப்பப்பட்டிருந்தது. படம் சம்பந்தப்பட்ட பலரிடம் பேசியபோது தான் புரொடக்சன் பாயில் இருந்து டைரக்டர் வரை அனைவருக்குமே இதுபோன்று போனஸ் தொகை தயாரிப்பாளர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து ஆச்சரியப்பட்டு போனார் சமீர் முகமது.
இந்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளதுடன், “இதுபோன்று ஒரு வெற்றிப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு இப்படி ஒரு தயாரிப்பாளர் உற்சாகம் அளிக்கும் விதமாக போனஸ் கொடுத்துள்ளார். இதுதான் படத்தில் பணியாற்றியவர்களை கவுரவிக்கும் விதம். மீண்டும் இந்த நிறுவனத்தில் அடுத்தடுத்து இதுபோன்று அன்பளிப்புகளை பெற ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.