ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது | சினிமாவில் நடக்கும் அநியாயங்களை பேசியதால் வாய்ப்பில்லை, சமையல் செய்து பிழைக்கிறேன் : ஸ்ரீரெட்டி புலம்பல் | பிளாஷ்பேக் : 40 ஆண்டுகளுக்கு முன்பே நடிகரான கஸ்தூரி ராஜா | பிளாஷ்பேக் : தமிழில் டப் ஆன முதல் மலையாள படம் | எனது கேரக்டர் குறித்த பயம், பதற்றம் இருந்தது : ‛லவ் மேரேஜ்' சுஷ்மிதா பட் | கவுதமியிடம் அமலாக்கத்துறை 7 மணி நேரம் விசாரணை |
'லிங்கா' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட்டின் சீனியர் நடிகரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான சத்ருக்கன் சின்ஹாவின் மகள்தான் சோனாக்ஷி. அவர் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ஜாகீர் இக்பால் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
சோனாக்ஷிக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ளது. 4200 சதுர அடியில் இரண்டு பெரிய பெட்ரூம் கொண்ட, முழுவதும் பர்னிஷ் செய்யப்பட்ட வீடாம். அந்த வீட்டை விற்பதற்கு சோனாக்ஷி முடிவெடுத்துள்ளாராம். அது பற்றிய அறிவிப்பு ஒன்றை வீடியோவுடன் ரியல் எஸ்டேட்ஸ் கம்பெனி ஒன்று விளம்பரம் வெளியிட்டுள்ளதாம். வீட்டின் விலை 25 கோடி என்கிறார்கள். அந்த வீட்டிலிருந்து பார்த்தால் மஹிம் பீச், பாந்த்ரா-ஒர்லி லின்க் தெரியுமாம். அந்த வீட்டில்தான் சோனாக்ஷி, ஜாகீர் ஆகியோரது திருமணம் நடந்துள்ளது. திருமணமான கொஞ்ச நாட்களிலேயே அந்த வீட்டை அவர்கள் விற்க வேண்டிய அவசியம் என்ன என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.