மார்க்கெட்டை‛ஸ்டெடி' செய்யும் நடிகை | ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'மெண்டல் மனதில்' படப்பிடிப்பு துவக்கம் | கதையின் நாயகனாக தொடர விரும்பும் சூரி! | சூர்யா அளித்த உறுதியால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | நடிகர் அல்லு அர்ஜுன் மீது தெலுங்கானா முதல்வர் குற்றச்சாட்டு | எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் | விதி எப்போதும் மாறாது: ஜெயம் ரவி | ஒரு நேர்மையாளனின் கதை - மனம் திறந்த நந்தா பெரியசாமி | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “ஒருதலை ராகம்” | 2024 - முத்திரை பதித்த முத்துக்கள்... |
எங்கேயும் எப்போதும், சென்னையில் ஒரு நாள், காக்டெயில் என இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார் மிதுன் மகேஸ்வரன்.
ஒளிப்பதிவு, சவுண்ட், எடிட்டிங்கில் பட்டயம் பெற்ற கையுடன் ஒளிப்பதிவாளராக, எடிட்டராக முயற்சித்தவரை நடிகராக்கியுள்ளது திரையுலகம். மிதுன் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்ததாவது...
சென்னையில் ஒளிப்பதிவு, சவுண்ட், எடிட்டிங் டிப்ளமோ முடித்துள்ளேன். எங்களது குடும்பம் அரசியல் பாரம்பரிய குடும்பம். ஆனால் அப்பா கரு நாகராஜன் (பா.ஜ., மாநில துணை தலைவர்) நண்பர்களுடன் இணைந்து 2006ல் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி 'அமுதே' என்ற படத்தை தயாரித்தார். அப்போது தான் சினிமாத்துறை மீது எனக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த காலகட்டத்தில் 'எங்கேயும் எப்போதும்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
இதன் இணை இயக்குனர் ராம் மூலம் அந்த வாய்ப்பு கிட்டியது. பிறகு 'சென்னையில் ஒரு நாள்' வாய்ப்பு கிட்டியது. அதில் படம் முழுக்க வேனில் இயக்குனர் சேரனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. படம் பெரியளவில் பேசப்பட்டது. அந்த படம் மூலம் சுற்றுலா, சிக்கிக்குச்சு சிக்கிக்குச்சு, காக்டெயில், எங்க காட்டில மழை என வரிசையாக பல்வேறு பட வாய்ப்புகள் கிடைத்தன.
யுத்த சப்தத்தில் இயக்குனர் பார்த்திபனுடன் உடன் வரும் கதாபாத்திரம். அதுவும் பெரியளவில் எனக்கு பாராட்டை பெற்று தந்தது. தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் என்ற படத்தின் மூலம் இயக்குனரான ராம், சுட்டு பிடிக்க உத்தரவு என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்ய வேண்டியிருப்பதால் ஒவ்வொரு படத்துக்கும் சற்று இடைவெளி இருக்கும். திரைஉலகில் எனக்கும் ஓர் இடம் கிடைக்கும்.
இயற்கை சார்ந்த படங்களில் நடிக்க விருப்பம். இதன் மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல முடிவதுடன் நம்மை காக்கும் இயற்கையையும் பாதுகாக்க முடியும்.
பட வாய்ப்புகள் இல்லாத நேரங்களில் குறும்படங்களையும் நடித்து இயக்கி தயாரித்து வருகிறேன். ஆண், டிஜிட்டல் உள்ளிட்ட பல குறும்படங்களை இயக்கி வருகிறேன். சமீபத்தில் நான் நடித்த கருவறை என்ற குறும்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். அதற்காக அவருக்கு மத்திய அரசு தேசிய விருதையும் வழங்கியது.
மனைவி ஹீரா கட்டட கலைஞர். என்னுடன் இணைந்து வெப் சீரியல்களையும் தயாரித்து வருகிறார். நயன்தாரா என்ற பெயரில் நான்கு பிரிவுகள் கொண்ட வெப்சீரியல் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. மக்கள் விரும்பும் கலைஞராக வேண்டும் என்பது தான் என் ஆசை.