'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த படத்தில் பங்கு பெற்ற பலரும் இந்த மகிழ்ச்சியை மீடியாக்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த விதமாக ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஹாலிவுட் நடிகர் அஜய் தேவகன் ஒரு பேட்டி ஒன்றில் இந்த பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டபோது இந்த விருது கிடைக்க நானும் ஒரு காரணம் என்று கூறியுள்ளார்.
கைதி ரீமேக் ஆக அஜய் தேவ்கன் நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள போலா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, “ஆர்ஆர்ஆர் படத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததற்கு நானும் ஒரு காரணம். ஏனென்றால் இந்த பாடலுக்கு ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆடியதற்கு பதிலாக நான் ஆடி இருந்தால் என்ன ஆகியிருக்கும்..? நான் நடனம் ஆடாததால் தான் இந்த பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது” என கலாட்டாவாக கூறியுள்ளார் அஜய் தேவ்கன்.