‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் | 8 ஆண்டுகளுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் கயல் சந்திரன் | இணைந்து நடிக்கும் தாயும், மகளும் |
இந்தியத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் மும்பை, கோல்கட்டா, சென்னை போன்றவைதான் திரைப்படத் தயாரிப்புகளுக்கான முக்கிய நகரங்களாக இருந்தன. அதன்பின் மொழிவாரியாக அந்தந்த மாநிலங்களில் திரைப்படத் துறை தனி வளர்ச்சி அடைந்தது.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் சென்னையை பின்னுக்குத் தள்ளி ஐதராபாத் முன்னேறியது. பல தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்போது தமிழ்ப் படங்களின் பூஜைகள் கூட சென்னையில் நடக்காமல் ஐதராபாத்தில் நடக்கும் அளவிற்குப் போய்விட்டது. இதை தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்கள், பிரபலங்கள் கூட கண்டு கொள்வதில்லை. சென்னை மீதான அவர்களது பாசம் எங்கே போனதென்று தெரியவில்லை.
இதனிடையே, பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன், தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை டில்லியில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தெலுங்கானாவில் அனைத்து வசதிகளையும் கொண்ட மிகப்பெரிய ஸ்டுடியோ ஒன்றை நிர்மாணிக்கும் தனது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தெலுங்கானா மாநிலத்தில் திரைப்படத் துறையை வளர்ப்பதில் தனது அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்றும் சொல்லியிருக்கிறார்.
தமிழகத்தில் சென்னை அருகே பூந்தமல்லியில் அனைத்து வசதிகளையும் கொண்ட 500 கோடி ரூபாய் செலவில் திரைப்பட நகரம் ஒன்றை நிர்மாணிக்க கடந்த ஆண்டில் தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், இங்குள்ள டாப் நடிகர்கள் யாருமே சென்னையில் திரைப்படத் துறையை வளர்க்க ஒரு ஸ்டுடியோவைக் கட்ட வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தியதில்லை.