Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ராப்தா (ஹிந்தி)

ராப்தா (ஹிந்தி),Raabta
 • ராப்தா (ஹிந்தி)
 • நடிகர்: சுஷாசந்த்சிங் ராஜ்புட்
 • கிர்தி சனோன்
 • இயக்குனர்: தினேஷ் விஜன்
10 ஜூன், 2017 - 15:04 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ராப்தா (ஹிந்தி)

பூர்வ ஜென்மத்தில் சேராத ஒரு காதல், நிகழ்காலத்தில் சேர்ந்ததா...? இல்லையா...? என்பதை நிகழ்காலம் பிளஸ் சரித்திர காலம் இரண்டையும் கலந்துகட்டி வெளியாகியிருக்கும் படம் தான் ராப்தா. ஏறக்குறைய ராஜமவுலி இயக்கத்தில் வெளியான மகதீரா படத்தின் உல்டா என்று கூட சொல்லலாம். சுசாந்த் சிங் ராஜ்புட், கிர்த்தி சனோன் ஆகியோர் நடிக்க, அறிமுக இயக்குநர் தினேஷ் விஜன் இயக்கியிருக்கிறார். இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா... என்று இனி பார்ப்போம்...!

பஞ்சாப் மாநிலத்தை சிவ் எனும் சுஷாந்த் சிங் ராஜ்நுபுட் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் புத்தாபெஸ்ட் வருகிறார். அங்கு வந்த இடத்தில் ஒரு நாள் ஹீரோயின் சாரா எனும் கிர்த்தி சனோனை சந்திக்க பார்த்த மாத்திரத்திலேயே காதல் தொற்றிக்கொள்கிறது. கிர்த்தியும், சுஷாந்த்தை காதலிக்கிறார். இப்போது கதையில் டுவிட்ஸ்ட்டாக ஜாக் எனும் ஜிம் சர்பா என்ட்ரி கொடுக்க, கிர்த்தி மீது காதல் கொள்கிறார் ஜிம். அதுமட்டுமல்ல கிர்த்தியிடம் போன ஜென்மத்தில் நீயும், நானும் காதலித்தோம், ஆனால் அந்த காதல் கைகூடவில்லை என்கிறார். அதற்கான காரணம் என்ன.? போன ஜென்மத்துக்கும், இந்த ஜென்மத்துக்கும் இடையேயான தொடர்பு என்ன.?, சுஷாந்த், ஜிம் இருவரில் கிர்த்தி யாரை காதலித்து கரம் பிடிக்கிறார் என்ற சுவாரஸ்யத்தோடு நிகழ்காலத்தையும், சரித்திர காலத்தையும் கலந்து விடை சொல்கிறது ராப்தா படத்தின் மீதிக்கதை.

கதை மற்றும் திரைக்கதை வலுவானதாக இல்லாததால் என்னவோ, யாருடைய நடிப்பும் பெரிதாக கவரவில்லை. இருந்தாலும் சுஷாந்த் சிங் மற்றும் ஜிம் இருவரும் நடிப்பில் ஈர்க்கின்றனர். ஆனால் ஹீரோயின் கிர்த்தியின் நடிப்பு சுமார் தான். கெஸ்ட் ரோலில் அது வயது முதிர்ந்த வித்தியாசமான தோற்றத்தில் வரும் ராஜ்குமார் ராவ் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பும் இரண்டு ராப்தாவிற்கு பக்காவாக பொருந்தியிருக்கிறது. ஆனால் பாடல்கள் இசையும், பின்னணியும் இசையும் ரசிகர்களை கொஞ்சம் கூட ஈர்க்கவில்லை.

அறிமுக இயக்குநர் தினேஷ் விஜன் ராப்தா படத்தை இயக்கியிருக்கிறார். நல்ல கதையிருந்தும் அதை திரைக்கதையில் சொல்ல தவறிவிட்டார் இயக்குநர். போன ஜென்மம், இந்த ஜென்மம் என இரண்டு விதமாக காலக்கட்டத்தில் கதை பயணிப்பதால் என்னவோ இயக்குநர் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். படத்தின் முற்பாதி சிறப்பாக இருக்கிறது. ஆனால் பிற்பாதி மிகவும் நீளமாக இருப்பது ரசிகர்களை சோர்வடைய செய்கிறது. ரசிகர்கள் கதையோடு ஒன்றிப்போகக் கூடிய அளவுக்கு வலுவான திரைக்கதை இல்லாததால் ராப்தா, பரிதாபமாக தெரிகிறது.

மொத்தத்தில், "ராப்தா - ரசிகர்கள் விரும்பினால்... சக்சஸ் தான்!"வாசகர் கருத்து (1)

samy - chennai,இந்தியா
13 ஜூன், 2017 - 12:12 Report Abuse
samy டைரக்டர் கதை வச்சிருக்கார் ஆனா கற்பனை சுத்தமா இல்லை படம், நிறைய படத்தோட தாக்கமா இருக்கு உதாரணமா மகதீரா, பாஹுபலி, அனேகன்... இப்படி சில ஹீரோ & ஹீரோயின் முன்ஜென்மம் நடிப்பு வேஸ்ட். வில்லன் - நடிப்பு சூப்பர்... ஆக்டர் ரகுவரனை எனக்கு ஞாபகப்படுத்திறார் அரைகுறை ஆடை சீன் நிறைய இருக்கு. வெளிநாடு சுத்தி பாக்கலாம், வேற ஒன்னியும் இல்ல படத்துல சாரி டைரக்டர் பெட்டெர் லக் நெக்ஸ்ட் மூவி
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in