குல தெய்வம் கோயிலுக்கு போங்க : ரசிகர்களுக்கு தனுஷ் அட்வைஸ் | முதல்வரின் வேண்டுகோளை கண்டிப்பா நிறைவேற்றுவேன்: இளையராஜா | மதராஸி, லோகா படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியானது! | 'கிஸ்' படத்தில் கதை சொல்லியாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி! | கும்கி- 2 படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட பிரபு சாலமன்! | ஓடிடியிலும் விமர்சனங்களை சந்தித்த கூலி! | பிளாஷ்பேக்: பல முதன்மைகளை உள்ளடக்கிய முழுநீள நகைச்சுவைச் சித்திரமாக வெளிவந்த சிவாஜி திரைப்படம் | நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! |
பாலிவுட்டின் பிரபல நடிகை கிர்த்தி சனோன். ஹிந்தியில் வெளியான ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ஜோடியாக சீதா வேடத்தில் நடித்தார். பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார். தேசிய விருதும் வாங்கி உள்ளார். தற்போது ‛க்ரூ' என்ற படத்தில் தபு, கரீனா கபூருடன் இணைந்து நடித்துள்ளார். மார்ச் 29ல் ரிலீஸாகிறது.
கிர்த்தி கூறுகையில், ‛‛நடிகர்களும் மனிதர்கள் தான். கலைஞர்கள் என்பதால் செய்தியாளர்கள், கேமரா முன்பு நாங்கள் வலுவானவர்கள் போன்று காண்பிக்கிறோம். ஆனால் எங்களுக்கு மனதில் வேறுமாதிரியான உணர்வுகள் உள்ளன. அதை மறைக்கிறோம். இந்த விஷயம் எனக்கு பிடிக்கவில்லை'' என்கிறார்.