இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் 'மதராஸி'. இப்படம் 100 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியை இயக்குனர் முருகதாஸ் இசையமைப்பாளர் அனிருத், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
100 கோடி வசூலைக் கடந்தாலும் இப்படம் லாபத்தை இன்னும் அடையவில்லை என்ற பாக்ஸ் ஆபீஸ் தகவலும் இருக்கிறது. சுமார் 150 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படம் தயாராகி உள்ளது. அதைப் பெறுவதற்கு 200 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்தாக வேண்டும். ஆனால், ஏறக்குறைய தியேட்டர் ஓட்டம் முடிவடைய உள்ளது. அதனால், அவ்வளவு வசூலுக்கு வாய்ப்பில்லை.
இருந்தாலும் படம் வெற்றி பெற்றுள்ளதாக படக்குழுவினர் கொண்டாடியுள்ளார்கள். சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை ஆகியவற்றின் மூலம் தயாரிப்பாளர் வேண்டுமானால் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்பதுதான் கோலிவுட்டின் தகவலாக உள்ளது.