Advertisement

தனுஸ்ரீ தத்தா

Birthday
19 Mar 1984 (Age 34)

மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் தனுஸ்ரீ தத்தா. 1984ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி, ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்த தனுஸ்ரீ, 2004ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றார். தொடர்ந்து அந்தாண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு தேர்வானார். அதில் டாப்-10 இடத்தை பிடித்தார். தனது 19வது வயதில் ஆஷிக் பன்யா அப்னே என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை துவக்கிய தனுஸ்ரீ, ரிஸ்க், குட் பாய் பேட் பாய் போன்ற படங்களில் நடித்தார். தமிழில், விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்தார். ஒருகட்டத்தில் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு ஆன்மிகத்தில் இறங்கிவிட்டார். கடைசியாக 2010-ம் ஆண்டு ராக் என்ற படத்தில் நடித்தார்.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in