பானுசந்தர் மகன் ஜெயந்த், இவர் இதற்கு முன்பே ஒரு படத்தில் அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. இப்போது மீண்டும் நீங்காத எண்ணம் என்ற படத்தில் நடிக்கிறார். அங்கீதா என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஷாஜகான்-செல்வராஜ் என்ற இரட்டையர்கள் இயக்குகிறார்கள்.
ஹீரோவின் குடும்பம் சாதாரண ஏழை குடும்பம், ஹீரோயின் குடும்பம் பணக்கார குடும்பம். இருகுடும்பத்துக்குமே நல்ல உறவு இருக்கிறது. இருகுடும்பத்தை சேர்ந்த ஹீரோவும், ஹீரோயினும் காதலிக்கிறார்கள். அவர்கள் காதலுக்கு அந்தஸ்தோ, ஜாதியோ குறுக்கே நிற்கவில்லை. வேறொன்று நிற்கிறது. அது யாராலும் யூகிக்க முடியாத காரணம். அது என்ன? காதலர்கள் சேர்ந்தார்களா என்பதுதான் கதை. குடும்ப செண்டிமெண்ட் படத்தில் சின்ன சஸ்பென்ஸ் வைத்து காமெடி, செண்டிமெண்ட், காதல் கலந்து உருவாகிறது இந்த படம்.