புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிகுழு, ஒன்பது ரூபாய் நோட்டு, ஹரிதாஸ், சிந்தனை செய், நந்தி உள்பட பல படங்களில் ஹீரோக்களுக்கு நண்பனாகவும், வில்லன்களுக்கு அடியாளாகவும் நடித்து வந்த நித்திஷ் ஹீரோவாகி விட்டார். கூத்துப்பட்டறையில் நடிப்பு படித்த நித்திஷ் விடா முயற்சியால் கவாத்து என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ரியா என்ற நியூபேஸ் ஹீரோயினாக நடிக்கிறார்.
காவல்துறை பயிற்சியில் ஒன்று கவாத்து பயிற்சி. கவாத்து என்றால் களையெடுப்பது என்று அர்த்தம். சரியாக பயிற்சி பெறாத காவலர்களை வீட்டுக்கு அனுப்புவதற்காக வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சது இந்த கவாத்து. படத்தில் விதார்த் நாட்டுல இருக்கிற கெட்டவங்கள களை எடுக்கிறாராம். ஜி.வி.பாலா டைரக்ட் செய்கிறார். சபேஷ்-முரளி மியூசிக். பாலபரணி கேமரா மேன்.