
கால்ஷீட் தர மறுக்கும் தம்பி.. புலம்பும் அண்ணன்
சமீபகாலமாக படங்களில் நடித்து வரும், புதுப்பேட்டை இயக்குனர், தன் தம்பியான, சுள்ளான் நடிகருக்கு இரண்டு கதைகள் தயார் செய்தபோதும், அதில் நடிப்பதற்கு, அவர் மறுத்து விட்டார். இதனால், கடும், "அப்செட்"டில் உள்ள இயக்குனர், "முதல் படத்திலிருந்து என் தம்பியை நடிக்க வைத்து சினிமாவில் ஆளாக்கினேன். ஆனால், இன்றைக்கு என் இக்கட்டான நேரத்தில் தம்பி கூட, எனக்கு ஆதரவுக்கரம் நீட்டவில்லை. தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பர். ஆனால், என் தம்பியோ, என் படத்தில் நடிக்க, "கால்ஷீட்" தர மறுக்கிறார்..." என்று சொல்லி, புலம்பி கொண்டிருக்கிறார், மேற்படி இயக்குனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!