
எம்.பி., சுப்ரியா சுலே மகள் திருமணம் : நடனமாடி அசத்திய ஷாருக்கான்
ஜூன் 22, 2026
Advertisement
தேசியவாத காங்கிரஸ் எம்.பி., சுப்ரியா சுலேயின் மகள் ரேவதியின் திருமணம் மும்பையில் கோலாகலமாய் இரண்டு நாட்கள் நடைப்பெற்றது. சங்கீத் விழா முதல் திருமணம் வரை நீடித்த இந்த கொண்டாட்டத்தில் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறிப்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ராம்தாஸ் அத்வாலே, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணியின் ரோகித் பவார், ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி நிறுவனர் குலாம் நபி ஆசாத், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் ஓவைசி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
தொழிலதிபரும், அதானி குழுமத் தலைவருமான கவுதம் அதானி மற்றும் அவரது மனைவி பிரீத்தி அதானி, திரையுலகில் இருந்து, அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயா பச்சன் மற்றும் மகள் ஸ்வேதா பச்சன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் நடிகர்கள் ஷாருக்கான், ஜாக்கி ஷெராப் மற்றும் ரவி கிஷன் ஆகியோரும் பங்கேற்றனர்.
சுப்ரியா சுலேயின் மகளான ரேவதி சுலே, லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் (London School of Economics) முன்னாள் மாணவர் ஆவார். அவரது கணவர் சாரங் லகானி, கொலம்பியா பிசினஸ் ஸ்கூலின் (Columbia Business School) முன்னாள் மாணவர் ஆவார். சாரங், நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபரும் அரசியல்வாதியுமான அருண் லகானியின் மகன் ஆவார்.
திருமணத்திற்கு முன்னதாக, சங்கீத் விழாவின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது. அந்த வீடியோவில், சங்கீத் விழாவின் போது ஷாருக்கான் தனது "குச் குச் ஹோதா ஹை" திரைப்படத்தின் பிரபலமான "கோய் மில் கயா" பாடலுக்கு நடனமாடி மணமக்களை மட்டும் அல்லாது விழாவிற்கு வந்தவர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!