
ஆடை குறித்து நடிகை பரீனாவின் பளிச் பதில்
ஜூன் 01, 2026
Advertisement
தமிழில் சின்னத்திரையில் ‛பாரதி கண்ணம்மா" தொடரில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பரீனா. பல்வேறு டிவி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவர் அளித்த ஒரு பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ஆடை தொடர்பாக அவர் கூறியதாவது, "என் பையன் முன்பே நான் சின்ன ஷார்ட்ஸ் போன்ற உடைகள் தான் அணிவேன். அதனால், நாளை வெளியே சென்று வேறு ஒரு பெண் அது போன்ற உடையில் இருந்தாலும், நம்ம அம்மாவும் சின்ன வயசிலிருந்தே இப்படித்தான் இருந்தார்கள் என்ற இயல்பான எண்ணம் தான் அவனுக்கு வரும். அதனால், ஒரு பெண் என்ன உடை அணிந்திருக்கிறார் என்பதை வைத்து அவளை தவறாக பார்க்கக் கூடாது என்ற புரிதல் சிறு வயதிலேயே உருவாகும். பசங்களை நாம் சரியான முறையில் வளர்த்தால், பெண்களைப் பற்றி தவறான எண்ணங்கள் அவர்களுக்கு வராது. பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க வேண்டுமெனில், பெண் குழந்தைகளை மட்டும் பாதுகாப்பாக இருக்க சொல்லுவது சரியாக இருக்காது. ஆண் குழந்தைகளுக்கும் பெண்களை மதிக்கும் பண்பை வளர்க்க வேண்டும்" என தெரவித்துள்ளார்.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!