
தந்தையின் நிழல் வேண்டாம்: நடிகர் வாரிசின் உறுதி
தளபதி நடிகரின் வாரிசு இயக்கியுள்ள மூன்றெழுத்து படம் திரைக்கு வர உள்ள நிலையில், படம் திரைக்கு வரும்போது, "உங்கள் தந்தைகுலத்துக்கு போட்டு காண்பித்து, அவர் சொல்லும் கருத்துக்களை வெளியிட்டு, "பப்ளிசிட்டி" செய்யுங்கள். படம் மிகப்பெரிய அளவில், "ஹிட்" அடிக்கும்..." என்று, சிலர் அவரை அறிவுறுத்தினர்.
அதற்கு தளபதியின் வாரிசு, "நான் இயக்கும் படத்தை துவங்கியபோது யார் யாரெல்லாமோ வாழ்த்தினர். ஆனால், அவர் என்னை வாழ்த்தவில்லை. அப்படிப்பட்டவர் படம் திரைக்கு வரும்போது மட்டும் எப்படி வாழ்த்துவார். அதோடு, என்னுடைய தனி திறமையை வைத்து தான் சினிமாவில் வெற்றி பெற விரும்புகிறேன். தந்தையின் நிழலில் நிற்க நான் விரும்பவில்லை. அவர் இல்லாமல் இதே சினிமாவில் நான் வெற்றி பெற்று காட்டுவேன்..." என்று கூறிவிட்டார், தளபதியின் வாரிசு.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!