‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் தொடர்கள் வரிசையில் நீண்ட நாட்களாக ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி மற்றும் சத்யா ஆகிய தொடர்கள் முக்கிய இடத்தை பிடித்து வந்தன. இதில் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' தொடர் அதிக எடையுள்ள கதாநாயகியை வைத்து புதுமையான கதைக்களத்துடன் 1000 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்தது. ரசிகர்கள் மத்தியிலும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதேப்போல் மற்றொரு தொடரான சத்யாவிலும் தைரியமான பெண்ணான ரெளடி பேபி சத்யாவுக்கும் பணக்கார பிஸினஸ் இளைஞரான அமுல் பேபி பிரபுவிற்கும் இடையே நடக்கும் காதல் கதை சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டு தொடர்களுமே வருகிற அக்டோபர் 24 ஆம் தேதியோடு முடிய போவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஒரு புரொமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இரண்டு தொடர்களின் நாயகன்கள், நாயகிகள் சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த தொடர்கள் முடிவுக்கு வருகின்றன. இவ்வளவு நாள் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. பிரியமுடியாமல் தான் சொல்கிறோம் குட்பை என தெரிவித்துள்ளனர்.
ஆனால், தொடர்கள் முடித்து வைக்கப்படுவதற்கான உண்மையான காரணங்கள் என்ன என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. திடீரென வெளிவந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் சீரியல்களை தொடரும்படியும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு கமெண்டுகளில் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.