மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
சின்னத்திரையில் தொடர்களை விட ரியாலிட்டி ஷோக்கள் தான் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் எல்லா சேனல்களும் விதவிதமான ஷோக்களை உருவாக்கி ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் நாளை(அக்., 10) முதல் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகிறது கலாட்டா ராணி நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கலந்து கொள்கிற வேடிக்கை, காமெடி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு 3 சுற்றுகளாக விதவிதமான போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுகிறவர்கள் கலாட்டா ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளை வெல்வார்கள். இந்த நிகழ்ச்சியை ஆதவன் மற்றும் ஜெயச்சந்திரன் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள். நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் பகல்12 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.