மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! |
சின்னத்திரையில் நாயகன்/ நாயகிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்த வனிதா ஹரிஹரனின் முகத்தை யாரும் மறந்துவிட முடியாது. வெள்ளித்திரையிலும் கால்பதித்த வனிதா 'டார்லிங்' மற்றும் 'செஞ்சிட்டாலே என் காதல' ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக மகராசி சீரியலில் ராகிணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் திடீரென தொடரை விட்டு விலகினார். அதன்பின் கணவருடன் பெல்ஜியம் சென்று விட்ட வனிதா தற்போது கர்ப்பமான வயிறுடன் இந்தியா திரும்பியுள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சீரியலில் நடிக்காததற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். அந்த பேட்டியில் வனிதா, 'எங்களுக்கு கல்யாணம் ஆகி 4 வருஷம் ஆகிடுச்சு. என்னுடைய கேரியருக்காக குழந்தை பெத்துக்கிறத கொஞ்சம் தள்ளிப்போட்டோம். இப்ப குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்ததால சீரியலிலிருந்து விலகிட்டேன். நான் நடிச்சிட்டு வந்தது வில்லி கேரக்டர். அது நடிப்பா இருந்தா கூட என்னுடைய குழந்தைய பாதிச்சிடக் கூடாதுன்னு தான் நான் சீரியலிலிருந்து வெளியேறினேன்' என அவர் கூறியுள்ளார்.
வனிதா ஹரிஹரனுக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க ரசிகர்கள் அனைவரும் தற்போது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.